புதன், 26 பிப்ரவரி, 2014

மலை மனிதன் தசரத் மான்ஜி

தனி ஒரு மனிதன் ஆகிய நான் என்ன பெரிதாக செய்து விட முடியும் இந்த மொத்த சமூகத்துக்கும் என்று எண்ணி நாம் எப்போதும் ஒதுங்கி செல்வது உண்டு அப்படி பட்ட நமக்கு நம்பிக்கை அளித்து தனி மனிதன் மூலம் இந்த சமூகம் மேம்படும் என்ற கருத்தை நம் மனதில் விதைத்து சென்று அற்புத மனிதனை பற்றியதான் இந்த தொகுப்பு  அந்த சமூக மனிதனின் பெயர் தசரத் மான்ஜி


பிறப்பும் வாழ்க்கையும் 

இந்தியாவின் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற ஊரில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் தசரத் மான்ஜி. இச்சிற்றூர் மலையின் ஒரு பக்கத்தில் குடிசைகளில் வாழும் மக்களைக் கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி. மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில்,மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.
களப்பணி 
தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி தனி ஒரு ஆளாக சுத்தியலும் உளியுமாகக் களத்தில் இறங்கினார். இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதையை உருவாக்கினார்.அதுவரை 80 கி. மீ மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் 13 கி. மீ தூரமானது. இதனால் அம்மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது.
தனது மனைவி மீதுள்ள காதல் தான் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் . ஆனால் அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் செய்யவில்லை என இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி பீகார் அரசு இவருக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கியுள்ளார்.

இறுதி நாட்கள் 

தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் பார்வை இவர்மீது திரும்பியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோய்க்கான செலவை அரசு ஏற்பதாகக் கூறியது. ஆனால் நோயின் தீவரம் காரணமாக 2007, ஆகஸ்ட் 18 அன்று மான்ஜ்ஜியின் உயிர் பிரிந்தது. ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தொடரும் சோகம் 

இப்படி இந்த தேசத்திற்கு அதன் மக்களுக்கும் அரசு செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதன் ஆக செய்து முடித்த  மான்ஜியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது இந்திய அரசு " அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியது மேலும் அவர்  அமைத்த மலை பாதை இன்றுவரை செப்பனிடப்படாமலேயே உள்ளது.(நாம் யாரை தெரிவு செய்கிறோம் ஓட்டு மூலம் )

தற்போது 

தசரத் மான்ஜியின் கதை திரைப்படமாகத் தயாரிக்கப்படுவதாகவும் இப்படத்தினை மானிஷ் ஜா என்ற இயக்குநர் இயக்க, மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் மான்ஜியின் பாத்திரத்தில் நடிப்பதாகவும் உதான் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் சிங் இப்படத்தினைத் தயாரிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.மேலும் நடிகர் அமீர்கான் தனது சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்வின் இரண்டாம் பாகத்தை தசரத் மான்ஜி அவரக்ளுக்கு அர்ப்பணம் செய்து உள்ளார் .“தஸ்ரத்தின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன்” என ஆமிர் தெரிவித்துள்ளார்.



22 வருடங்கள் தனி ஒரு மனிதன் ஆக போராடி அந்த ஊரின் மக்களுக்கு பாதை அமைத்து கொடுத்த தசரத் மான்ஜி உண்மையில் மலை மனிதன் தான் ........................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக