வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நாமும் பின் நாமும்

(எல்லா )புகைப்பட உதவி -குகிள் ஆண்டவர் 

நாம் இவளவு தானே என்று கண்டிக்காமல் தடை செய்யாமல் விடும் ஓவ்வொரு நிகழ்வும் மிக பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் பின் நாளில் என்பதன் நிகழ்கால உதராணம் பெண்கள் தொடர்சியான வன்புணர்வு ,இப்படி மொத்த படி நிலையும் நாசம் ஆகும் வரை எதோ நமக்கும் இந்த சமூகத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று இருந்து விட்டு இன்று நடக்க கூட சம்பவங்கள் நடந்த பிறகு புலம்பியும் எழுதி தள்ளியும் ஒன்றும் ஆக போவது இல்லை ,நாம் எழுதுவது எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது இங்கு இன்றுவரை எல்லாம் குப்பையும் கூட ,



இன்றும் நம் வீடுகளில் வண்புணர்வு குறித்து உரையாட தொடங்கி இருக்கிறோமா ? ஆண் பெண் சமத்துவம் பற்றி குழந்தைகளிடம் சொல்லி கொடுக்க ஆரம்பம் செய்து விட்டோமா ? ஆணுக்கு கீழ் தான் பெண் என்று சொல்லும் எல்லா மத நூல் பொய் என்று சொல்லி கொடுத்து விட்டோமா ?ஆணும் பெண்ணும் இணைந்து படிக்கையில் ஏற்படும் கவர்சியை இது எல்லாம் இந்த வயதில் கார்மோன் மாற்றம் மூலம் தான் ஏற்படுவது தான் என்று சொல்லி கொடுக்க தொடங்கி விட்டோமா ? ஆணும் பெண்ணும் சமத்துவமாக நட்புடன் பழகும் நிலைமையை சரி என்று இன்று வரை ஓத்து கொண்டு இருக்கிறோமா ?

ஆணும் பெண்ணும் தனி தனி தீவு போல் இன்றும் கல்லூரி ,பள்ளிகள் பிரித்து வைத்து இருப்பதை கண்டு அதற்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறோமா ? ,ஆணும் பெண்ணும் பழகினால் காதல் என்று எண்ணும் கேவல மனநிலை பெற்று இருப்பது சரி இல்லை என்று குடும்பத்தில் விவாதித்து இருக்கிறோமா?,ஆணை (உடல் )பற்றி பெண்ணுக்கும் பெண்ணை (உடல் )பற்றி ஆணுக்கும் சொல்லி கொடுத்து இருக்கிறோமா ? பெண் உடல் அனுபவிக்கவே என்ற கேவல சிந்தனையை தொடர்ந்து புகுத்தியதும் ,புகுத்தி கொண்டு இருப்பவர்களுக்கு எதிராக குரல் கொடுத்ததும் போராடியும் இருக்கிறோமா ?



இப்படி பல்வேறு தவறுகளை செய்து விட்டு பெண்
வன்புணர்வு செய்ய படும் போது எழுதி குவித்து கொண்டு இருப்பதால்  ஒன்றும் சரி ஆக ஆக போவதுமில்லை ,கடந்தவை கடந்தவையாக இருக்கட்டும் ,இனி உள்ள தலைமுறை ஆவது பாதுகாக்க படட்டும் அதனால் ஆண் பெண் சமத்துவத்தை அவர் அவர்  குழந்தைகள் இடம் இருந்து தொடங்குங்கள் ,வாருங்கள் புது உலகம் படைப்போம் 

புதன், 26 பிப்ரவரி, 2014

யார் குற்றவாளி

சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் டி.சி.எஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) நிறுவனத்தில் பணியாற்றி வந்த உமா மகேஸ்வரி (24) என்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.  கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அலுவலகத்திலிருந்து திரும்பாததால், அவருடன் தங்கியிருந்த தோழிகள் டி.சி.எஸ்சுக்கும்,  சேலம் ஆத்தூரில் உள்ள அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து சென்னை வந்த உமா மகேஸ்வரியின் தந்தை போலீசில் புகார் கொடுத்திருந்தார்.


இந்த கொடூர கொலையில் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று ஒரு வாதத்தை வைத்து கடந்து செல்வது யாவருக்கும் எளிது ஆனால் இதற்கு பின் இருக்கும் முதலாளித்துவ கம்பெனிகளின் நிலை  மிக முக்கியம் அது  நாம் என்றும் கவனிக்க தவறுவது  .

பொருளாதார மந்தம் ஏற்பட்ட பிறகு கம்பெனிகள் செய்த ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்ந்து லாபம், அதகரிக்க அவர்கள் செய்த காரியம்  நிறுவனத்தின் செலவில் போக்குவரத்து வசதி, இலவச காஃபி, இளைப்பாறும் அறைகள், உடற்பயிற்சி அறைகள் போன்று ஏற்கனவே அளிக்கப்பட்ட வசதிகள் அனைத்தும் கேள்விக்கிடமின்றி வெட்டப்பட்டன. ஊதிய உயர்வுகளும், ஊக்கத் தொகைகளும் மறுக்கப்பட்டு வந்தன.ஆனால் இவைகள் எல்லாம் ஊழியரின் உரிமைகள் ஆனால் இவை எல்லாம் மறுக்க படும் போதும் அமைதியாக இருந்து கொண்டே இருப்பது ஒவ்வொரு ஊழியரும் செய்யும் பணி இதற்கு பின்னால் தங்கள் பணி போய் விடும் என்ற பயம் தான் காரணம் .பக்கத்து அறையில் கொலை விழுந்தாலும் எதுவும் பேச கூட முடியா நிலையை உருவாக்கி வைத்து இருக்கிறது நிறுவனங்கள் எல்லாம் ,முதலாளிகள் சேர்ந்து நாஸ்காம் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்,ஆனால் ஊழியர்கள் இன்று வரை தங்களை காத்துகொள்ள தொழிற்சங்க அமைப்பை ஏற்படுத்த வில்லை  அதற்கு கம்பெனிகளும் அனுமதிக்க வில்லை 

மேலும் இப்போது புதிதாக வரும் பணியாளர்களை நிழல் ஊழியர் என்ற முறையில் பணி அமர்த்தி சிறிது அளவே ஊதியம் கொடுக்க படுகிறது .பணி செய்பவர்களுக்கு வேறு வழி இல்லை கடனை வாங்கி தான் படித்து வேலைக்கு வருவதால் கடனை அடைக்க எல்லாவற்றிக்கும் பணிந்து தான் ஆக வேண்டும் 

இப்போது சகோதரி உமா மகேஸ்வரி நம்மோடு இல்லை ஒரு ஊழியரின் பாதுகாப்பை உறுதி செய்வது அவர் பணி செய்யும் நிறுவனத்தின் கடமை ,அப்படி பட்ட கடமையில் இருந்து அந்த நிறுவனம் தவறி இருக்கிறது,அந்த நிறுவனத்தை காப்பாற்ற பெண் பாதுகாப்பு இல்லை என்ற ஒற்றை வாதம் முன்வைப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை  .ஓவ்வொரு பத்திரிகையும் மாற்றி மாற்றி எழுதி இந்த கொலை பின்னால் இருக்கும் (அந்த பெண் வேலை செய்த நிறுவனம் )நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பாதுகாப்பை நிராகரித்து இருப்பதை வெளிபடுத்த வில்லை.கடைசியில் இந்த நிகழ்வில் அந்த பெண் தனியாக நடந்து சென்றது தான் கொலைக்கு காரணம் என்று அந்த சகோதரி மேல் பழி போட்டு தப்பித்து கொண்டது தான் வேதனை 

என்ன செய்ய போகிறார்கள் தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் ?

என்று அமைய போகிறது தொழிற்சங்கம் ?

எப்படி பணி பாதுகாப்பு ஏற்படுத்த போகிறார்கள் கம்பெனிகள் ?

யார் அது சரியாக செய்கிறது செயல்படுகிறது என்பதை முடிவு செய்வது என்ற எண்ணற்ற கேள்விகளுடன் ....................... 

மலை மனிதன் தசரத் மான்ஜி

தனி ஒரு மனிதன் ஆகிய நான் என்ன பெரிதாக செய்து விட முடியும் இந்த மொத்த சமூகத்துக்கும் என்று எண்ணி நாம் எப்போதும் ஒதுங்கி செல்வது உண்டு அப்படி பட்ட நமக்கு நம்பிக்கை அளித்து தனி மனிதன் மூலம் இந்த சமூகம் மேம்படும் என்ற கருத்தை நம் மனதில் விதைத்து சென்று அற்புத மனிதனை பற்றியதான் இந்த தொகுப்பு  அந்த சமூக மனிதனின் பெயர் தசரத் மான்ஜி


பிறப்பும் வாழ்க்கையும் 

இந்தியாவின் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள கெலார் என்ற ஊரில் 1934-ம் ஆண்டு பிறந்தவர் தசரத் மான்ஜி. இச்சிற்றூர் மலையின் ஒரு பக்கத்தில் குடிசைகளில் வாழும் மக்களைக் கொண்டது. இவர்கள் குடிநீருக்காக மலையின் மறுபக்கம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டும். இந்த சிற்றூரைச் சேர்ந்த விவசாயக் கூலியான தசரத் மான்ஜி, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். 1959 ஆம் ஆண்டில் இவருடைய மனைவி பால்குனி தேவி மலையின் மறுபக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும்போது மலையிலிருந்து இடறி விழுந்து படுகாயமடைந்தார். அம்மலைச் சிற்றூர்களில் அவசர உதவிக்குக் கூட மருத்துவ உதவி கிடைக்காத சூழலில் 80 கி. மீ தூரத்தில் உள்ள வஜீரகஞ்ச் மருத்துவமனையையே நம்பியிருக்க வேண்டிய நிலையில்,மருத்துவ மனைக்குச் செல்லும் போதே இவருடைய மனைவி இறந்து போனார்.
களப்பணி 
தனது மனைவியைப் போல அவசர மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் இறக்கக் கூடாது எனக் கருதிய மான்ஜி தனி ஒரு ஆளாக சுத்தியலும் உளியுமாகக் களத்தில் இறங்கினார். இயற்கைச் சீற்றங்கள், உடல் நலிவு என எத்தனையோ இன்னல்களுக்கிடையில் 1959 முதல் 1981 வரை 22 வருடங்கள் கடுமையாக உழைத்து, 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதையை உருவாக்கினார்.அதுவரை 80 கி. மீ மலையினைச் சுற்றிச் சென்றடைய வேண்டிய வஜீரகஞ்ச் 13 கி. மீ தூரமானது. இதனால் அம்மலையைச் சுற்றியுள்ள 60 கிராம மக்களும் பயனடைய முடிந்தது.
தனது மனைவி மீதுள்ள காதல் தான் இந்தப் பெரும் பணியைச் செய்து முடிக்கும் சக்தியைக் கொடுத்தது. அதோடு ஆயிரக்கணக்கான மக்கள் கவலையின்றி இந்த மலையைக் கடந்து செல்வதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளதாகக் . ஆனால் அரசு விருது கொடுக்கும் என்பதற்காக நான் செய்யவில்லை என இதனைப் பொருட்படுத்தாத மான்ஜி பீகார் அரசு இவருக்கு இலவசமாக வழங்கிய ஐந்து ஏக்கர் நிலத்தையும் தனது கிராமத்தில் மருத்துவமனை கட்டுவதற்காக வழங்கியுள்ளார்.

இறுதி நாட்கள் 

தனது வாழ்வின் கடைசி நாட்களில் பித்தப்பை புற்றுநோயோடு போராடிக் கொண்டிருந்தபோதுதான் அரசின் பார்வை இவர்மீது திரும்பியது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்று நோய்க்கான செலவை அரசு ஏற்பதாகக் கூறியது. ஆனால் நோயின் தீவரம் காரணமாக 2007, ஆகஸ்ட் 18 அன்று மான்ஜ்ஜியின் உயிர் பிரிந்தது. ரயில் மூலம் சொந்த ஊருக்குக் கொண்டுவரப்பட்ட மான்ஜியின் உடல், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

தொடரும் சோகம் 

இப்படி இந்த தேசத்திற்கு அதன் மக்களுக்கும் அரசு செய்ய வேண்டிய பணியை தனி ஒரு மனிதன் ஆக செய்து முடித்த  மான்ஜியின் பெயர் பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட போது இந்திய அரசு " அவர் தனி ஆளாகத்தான் அந்த மலையைப் பிளந்தார் என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியது மேலும் அவர்  அமைத்த மலை பாதை இன்றுவரை செப்பனிடப்படாமலேயே உள்ளது.(நாம் யாரை தெரிவு செய்கிறோம் ஓட்டு மூலம் )

தற்போது 

தசரத் மான்ஜியின் கதை திரைப்படமாகத் தயாரிக்கப்படுவதாகவும் இப்படத்தினை மானிஷ் ஜா என்ற இயக்குநர் இயக்க, மனோஜ் பாஜ்பாய் என்ற நடிகர் மான்ஜியின் பாத்திரத்தில் நடிப்பதாகவும் உதான் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் சிங் இப்படத்தினைத் தயாரிப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.மேலும் நடிகர் அமீர்கான் தனது சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்வின் இரண்டாம் பாகத்தை தசரத் மான்ஜி அவரக்ளுக்கு அர்ப்பணம் செய்து உள்ளார் .“தஸ்ரத்தின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுக்கு நான் தலைவணங்குகிறேன்” என ஆமிர் தெரிவித்துள்ளார்.



22 வருடங்கள் தனி ஒரு மனிதன் ஆக போராடி அந்த ஊரின் மக்களுக்கு பாதை அமைத்து கொடுத்த தசரத் மான்ஜி உண்மையில் மலை மனிதன் தான் ........................